Welcome to Foreign Job Searching Guide

Welcome to Foreign Job Guide If your are Looking for Foreign Jobs you can send your CV to blow listed companies and Human Resources Departments.

Thursday, September 10, 2015

EARLY MORNING WALKING

EARLY MORNING WALKING

EARLY MORNING WALKING CAN JUMP-START YOUR SYSTEM, CLEAR YOUR MIND AND GET YOU READY TO TACKLE THE STRESSES OF DAILY LIFE. SOME OF THE MANY ADVANTAGES OF A BRISK STROLL EARLY IN THE DAY ARE THE COOL AND QUIET OF DESERTED SIDEWALKS OR LEAFY TRAILS, AN EARLY MORNING ENERGY LIFT AND THE AFTERGLOW OF TRANQUILITY AND CALM THAT WILL CENTER YOU FOR THE REST OF THE DAY.

Friday, September 4, 2015

HEALTH BENEFITS OF DHANURASANA

HEALTH BENEFITS OF DHANURASANA

1 ACT AS A STRESS RELIEVER.
2 CURE MENSTRUATION DISORDER.
3 CURES CONSTIPATION.
4 CURES RESPIRATORY DISORDER LIKE ASTHAMA.
5 EFFECTIVE IN WEIGHT LOSS.
6 GIVES FLEXIBILITY TO THE BACK.
7 HELPFUL IS STIMULATING REPRODUCTIVE ORGANS.
8 HELPS TO CURE DYSPEPSIA (OBESITY), RHEUMATISM AND GASTROINTESTINAL PROBLEMS.
9 IMPROVE FUNCTION OF KIDNEY AND LIVER.

10 IMPROVE FUNCTION OF THE PANCREAS AND IT IS BENEFICIAL IN DIABETES.
11 IMPROVE THE FUNCTION OF LIVER, PANCREAS, SMALL INTESTINE AND BIG INTESTINE.
12 IMPROVES BLOOD CIRCULATION.
13 IMPROVES DIGESTION AND APPETITE.
14 IT IMPROVES POSTURE.
15 LADIES SHOULD NOT PRACTICE YOGA DURING PREGNANCY AND IN PERIODS.
16 RELEASES BACK PAIN.
17 STRENGTHENS ANKLES, THIGHS, GROINS, CHEST, AND ABDOMINAL ORGANS.
18 STRENGTHENS BACK MUSCLES.

PRECAUTION
THE PERSON SUFFERING FROM HIGH BLOOD PRESSURE, BACK PAIN, HERNIA, HEADACHE, MIGRAINE OR ABDOMEN SURGERY SHOULD NOT DO PRACTICE DHANURASANA.

BENEFITS OF CHAKRASANA

BENEFITS OF CHAKRASANA

1.    VERY USEFUL IN TREATING DIABETES, ASTHMA, CONSTIPATION AND OBESITY
2.       BENEFICIAL FOR YOUR CARDIOVASCULAR, GLANDULAR AND NERVOUS SYSTEMS HEALTH

3.       EXCELLENT FOR THE HEART

4.       HAS A POSITIVE EFFECT ON HORMONAL SECRETIONS 

5.       INCREASES ELASTICITY OF THE SPINAL CORD

6.       PREVENTS RESPIRATORY DISORDERS AND RELIEVES STIFFNESS OF JOINTS, BACK, SHOULDER AND THE THORACIC CAGE

7.       RECOMMENDED FOR ANYONE SUFFERING DIGESTIVE OR RESPIRATORY DISORDERS

8.       STRENGTHENS THE LIVER, PANCREAS AND KIDNEYS

9.       STRENGTHENS THE MUSCLES OF THE HANDS AND FEET

10.    STRENGTHENS THE VERTEBRAL COLUMN AND INCREASES THE OXYGEN IN-TAKE CAPACITY

மூலிகை மந்திரம் : சுக்கு

மூலிகை மந்திரம் : சுக்கு

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை... சுப்பனை (முருகன்) மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்ற சொல் வழக்கு நெடுங்காலமாக  நிலவும் ஒன்று. அந்த அளவுக்கு அனைவரும் அறிந்த, நாம் அடிக்கடி பயன்படுத்துகிற மருத்துவ குணங்கள் நிறைந்தது சுக்கு.  இந்த சுக்கு எத்தனை மருத்துவ குணங்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.உலர்ந்த இஞ்சியையே சுக்கு என்று அழைக்கிறோம். இதற்கு வீரம், சிங்கி, நாகமலி, சௌபாக்கியம், சுண்டி, சுடுபத்திரம், அருக்கன், வேர்க்கொம்பு என்று வேறு பல  பெயர்களும் உண்டு. சுக்கினுடைய மேல்தோல் நச்சுத்தன்மை உடையது என்றாலும், உள்ளிருக்கும் கிழங்கு நற்பலன்கள் நிறைந்தது. 

அதனாலேயே சுக்குக்கு ‘நச்சு சூழ்ந்த அமுதம்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் தோல் நீக்கிய பின் மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவர். *Zingiber officinale' என்பது சுக்கின் தாவரவியல் பெயர். இதையே *Ginger' என்று ஆங்கி லத்தில் சொல்கிறோம். ஆயுர்வேதத்தில் ‘சுண்டி’, ‘சொண்டி’, ‘நாகரா’, ‘மகாஔஷதா’, ‘விஷ்வா’, ‘விஷ்வ பேஷஜா’, ‘நவசுறு’, ‘சௌபன்னம்’ என்றெல்லாம் அழைப்பதுண்டு. 

சுக்குக்கு வயிற்று மந்தம், செரியாமை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், உடல் வெப்பம், மூலம், ஆஸ்துமா, இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், சீதள சம்பந்தமான நோய்கள், நீராய்க் கழிகிற வயிற்றுப்போக்கு, குன்மம், வயிற்று உப்புசம், காதுவலி, முகவாதம், தலைவலி, வயிற்றுவலி, வயிற்றுக்குத்தல், சீதளசுரம், வாயு போன்ற பிரச்னைகளை குணமாக்கும் திறன் உண்டு. 

சுக்கினால் செய்யப்படும் தீநீரினால் சுறுசுறுப்பு உண்டாகும். அஜீரணம், அதிசாரம், இருமல் குணமாகும். வயிற்றுவலி, ஜுரம், 
பித்தம் போக்கவும் உபயோகப்படும். இதை இரவினில் சாப்பிட்டுப் படுத்தால் வாத ரோகத்தைத் தடுக்கும். சுக்குக் குடிநீரோடு சோடா உப்பு கலந்து சாப்பிட வயிற்றுப் புளிப்பு குணமாகும். 

இதனால் குடலைச் சுருட்டிப் பிடித்தல், தீராத வாதக் குடைச்சல், விலாக்குத்தல், மார்பு எரிச்சல், காதுவலி, வயிற்று வலி,  தலைவலி, உடல்வலி ஆகியன குணமாகும்.  வாயுவைத் தணிக்கக் கூடியது. கொழுப்புச் சத்தைக் குறைக்கக்கூடியது. நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளியேற்றவல்லது. ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது. வியர்வையைத் தூண்டக் கூடியது. ஒற்றைத்  தலைவலிக்கும், இறுக்கமான க்ளஸ்டர் தலைவலிக்கும் சுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. 

இந்திய ஆயுர்வேத மருத்துவம் பசியின்மைக்கும் அஜீரணத்துக்கும் காதுவலிக்கும் ரத்தசோகைக்கும், மூட்டு வலி, இருமல்,  சளியோடு ரத்தம் துப்புதல் ஆகிய நோய்களுக்கும் சுக்கினை சிபாரிசு செய்கிறது. ஜெர்மானிய மருத்துவர்கள் பசியின்மைக்கும்,  பிரிட்டிஷ் மருத்துவர்கள் மகப்பேறு கால வாந்தி, குமட்டலை நிறுத்துவதற்கும், நெஞ்சகக் கோளாறுகளை குணமாக்குவதற்கும்,  வாதக் குடைச்சலையும் வீக்கத்தையும் குணமாக்க சிபாரிசு செய்கின்றனர்.

சுக்கில் Monoterpene, Zingiberene, Gingerol, Shogaol, Sulphonicacid போன்ற பல மருத்துவ  வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. சுக்கும் இஞ்சியும் இரைப்பையில் ஏற்படும் அமிலச்சுரப்பைத் தணித்து குமட்டல், வாந்தி ஆகிய  துன்பங்களை தடுக்கவல்லவை. சிலருக்கு அமிலச்சுரப்பு அதிகரிப்பதாலும் சிலருக்கு வாகனங்களில் வேகமாகப் பயணிக்கும் போதும் வாந்தி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. 

இந்நிலையில் இஞ்சியும் சுக்கும் அமிலச் சுரப்பை அளவான நிலைக்குக் கொண்டு வந்து வாந்தி வராமல் தடுத்து நிறுத்த உதவுகிறது. அதனால்தான் பன்னெடுங்காலமாகப் பேருந்து நிலையங்களில் ‘இஞ்சி முரப்பா’ எனும் தின்பண்டம் கூவிக்கூவி விற்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. பஸ் பயணிகளுக்கு வாந்தி, குமட்டல், தலைசுற்று வராமல் தடுக்கும் மருந்தாக ‘இஞ்சி முரப்பா’  பலனளிக்கின்றது.

சுக்கிலுள்ள ‘ஜிஞ்சிரால்’, ‘ஷோகோல்’ ஆகிய வேதிப்பொருட்கள் லேசான மயக்கம் தருவதாகவும், வீக்கத்தைக் கரைக்கக்  கூடியதாகவும், காய்ச்சலைத் தணிக்கக் கூடியதாகவும், வலி நிவாரணியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லதாகவும்,  ஈரலை பாதுகாக்கக் கூடியதாகவும் இருப்பதால் சுக்கு உணவிலும் மருந்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதய ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் பாதுகாக்கும் மருத்துவ குணங்களும் சுக்குக்கு உண்டு. சுக்கிலுள்ள மருத்துவ  வேதிப்பொருட்கள் ரத்த வட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைத்து ஒற்றைத் தலைவலியை தடுத்து நிறுத்தக்கூடியதாக  அமைகிறது. 

சுக்கை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

சுக்கின் மீது சுண்ணாம்புக் களிம்பை நன்றாகப் பூசி வெயிலில் உலரவிட்டு உலர்ந்ததும், மேல் தோலைச் சுரண்டி  நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். 

மதிய உணவோடு எவ்வகையிலேனும் சுக்கை சேர்த்துக் கொள்வதால் வாயுக் கோளாறுகள் விலகி ஆரோக்கியத்துக்கு  அடி கோலுகின்றது. 

இன்றைக்கும் அரிசி மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ‘அதிரசம்’ எனும் தின்பண்டத்தில்  சிறிது சுக்குப்பொடி சேர்ப்பர். சுவையான அதிரசம் சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் சுகம் கெடாவண்ணம் சுக்கு சேர்க்கப்படுவது  மட்டுமின்றி உணவில் மருந்தாகவும் அது செயல்படுகிறது என்பதுதான் உண்மை. 

உடலில் பித்த மேலீட்டால் குமட்டல், வாந்தி, தலைசுற்றல் ஏற்படும் போது சுக்குத் தூளை வெருகடி (சுட்டு விரல்,  நடு விரல், கட்டை விரல் ஆகியவற்றைச் சேர்த்து எடுக்கும் அளவு) அளவு எடுத்துத் தேன் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட விரைவில் குணம் ஏற்படும். 

சுக்கை நீரிட்டுக் குழைத்து நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும். இதையே தொண்டை மீது பூசினால் தொண்டைக்  கர கரப்பு, தொண்டைக்கட்டு, வலி ஆகியன குறைந்து விடும். சுக்குக் களிம்பை நெற்றிப் புருவங்களின் மேல் பூசி வைக்க கிட்டப் பார்வைக் கோளாறு குணமாகும். 

வெருகடி சுக்குப்பொடியை போதிய வெல்லம் சேர்த்து நீரிலிட்டு காபி போல காய்ச்சி வடிகட்டி பால் சேர்த்துக்   குடித்துவர அஜீரணம் அகலும். அதிசாரம் என்கிற நீர்க்கழிச்சல் அடங்கும். சுக்குத்தூள் வெருகடி அளவு எடுத்து போதிய அளவு பசு  நெய்யும் வெல்லமும் சேர்த்துக் குழைத்து அந்தி, சந்தி என இருவேளை சாப்பிட்டுவர நெஞ்சகச் சளி கரையும். இருமல்  குணமாகும். சுக்குத் தூளோடு எலுமிச்சைச்சாறு இரண்டு பங்கும் சோற்றுப்பு சிறிதளவும் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட வயிற்று உப்புசம், மந்தம் ஆகியன போகும்.

சுக்குத் தூளோடு சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் சாதாரண வயிற்று வலியும்,  விட்டுவிட்டு கடுக்கும்  வயிற்று வலியும் உடனே குணமாகும். பத்து கிராம் சுக்குத்தூளோடு 5 மி.லி. விளக்கெண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைத்து  தினம் இரவு படுக்கப்போகும் முன் ஒரு மண்டலம் உண்டுவர மூட்டுவலிகள், மூட்டு வீக்கம் ஆகியன குணமாகும். 

வெருகடி அளவு சுக்குப் பொடியோடு சிறிது தேனும் எலுமிச்சைச்சாறும் சேர்த்துக் குழைத்து அன்றாடம் காலையில்  உண்டுவர உடல் பலம் பெறும். மேலும் இதுவே உடல் வியர்வையைப் பெருக்கிக் காய்ச்சலைத் தணிப்பதற்கும் உடல் அழகு  கூடுவதற்கும் பயன்தரும்.  சுக்குப் பொடியோடு பூண்டுச்சாறு சேர்த்து சாப்பிட கொடுமையான வயிற்றுநோய் குணமாகும். 

சுக்குத் துண்டை பல்வலி வந்தபோது வாயிலிட்டு அடக்கி வைத்திருக்க பல் வலி தணியும். சுக்குத் தூளோடு பத்துப் பதினைந்து துளசி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைத்து சுவைக்காகத் தேன் சேர்த்துக் குடித்துவர ஆஸ்துமா குணமாகும்.சுக்குப் பொடியோடு ஐந்தாறு பூண்டுப் பற்கள் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனின்று வரும் ஆவியை சுவாசிப்பதால் ஆஸ்துமா நோயின் வேதனை தணியும். 

சுக்குப்பொடி வெருகடி அளவோடு துளசிச்சாறு ஒரு தேக்கரண்டியும் வெற்றிலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் சேர்த்துக்  குழைத்து சாப்பிட்டுவர வறட்டு இருமல், நெஞ்சுச் சளிேயாடு கூடிய இருமல் ஆகியன அனைத்தும் விலகிப் போகும். மஞ்சள்காமாலை வந்தபோது வெருகடி அளவு சுக்குத் தூளோடு புதிதாகப் பிழிந்த எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி, புதினா சாறு ஒரு தேக்கரண்டி, சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வர ஈரல் பலம் பெறுவதோடு மஞ்சள் காமாலையும் குணமாகும். 

சுக்குத்தூளோடு சம அளவு புதினா சாறும் சிறிதளவு உப்பும் சேர்த்து சாப்பிட்டு வர கக்குவான் இருமல் குணமாகும்.  சுக்குத் தீநீரை இரவு படுக்கப் போகுமுன் அன்றாடம் குடித்துவர வாத நோய்களை தடுக்கும். உதறுவாதம், முகவாதம், பாரிசவாதம், பக்கவாதம் எனப்படுகின்ற அனைத்து வாதக் கோளாறுகளும் விலகிப் போகும்.

Thursday, September 3, 2015

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு

உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமான பச்சை பயறு  குறித்து நாம் இன்று பார்ப்போம்:  பல்வேறு சத்துக்களை கொண்ட பச்சை பயறு, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல் பூச்சு  மருந்தாகவும் பயன்படக் கூடியது. பச்சை பயறில் புரதம், மினரல், வைட்டமின் அதிகம் உள்ளன. பச்சை பயறை கொண்டு உயர்  ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கலாம். 

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் 2 பல் பூண்டு, மிளகு தட்டி போடவும்.  லவங்க பட்டை சேர்க்கவும். இதில்,  வேகவைத்து அரைத்து வைத்த பச்சை பயறை போட்டு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சுவைக்காக உப்பு சிறிதளவு சேர்க்கலாம்.  5 நிமிடத்தில்  பச்சை பயறு சூப் தயார். இதை சாப்பிட்டுவர பிபி, கொழுப்பின் அளவு குறையும்.முளைவிட்டு இருக்கும் பச்சை  பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை  நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.

2ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து  பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு  பெறும். சுருக்கங்கள் மறைந்து முகம் மென்மை பெறும்.பச்சை பயறை கொண்டு பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் வலியை  குறைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பச்சை பயறை ஊற வைத்து அரைத்து பசை எடுத்துக் கொள்ளவும். அதில்  கொஞ்சம் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை சிறிது நேரம் கிளறினால் களி போன்று வரும். இதை இளஞ்சூடு  பதத்தில் வீக்கம் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். 

இது, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரப்பால் ஏற்படும் மார்பக வீக்கத்தை சரி செய்யும். பால் சுரப்பை  சமப்படுத்தும். அக்குளில் ஏற்படும் நெறிக்கட்டியை சரி செய்யும். பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு  தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான  உப்பு சேர்த்து கிளறியபின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை  தடுக்க கூடியது. வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை  பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். 

கண்ணீர் முதல் கடவுள் வரை காயம் ஆற்றும் வெங்காயம்

இப்போதைக்கு நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது வெங்காயம்தான். நாடு முழுவதும் வெங்காயத்திற்கான விலை எகிறியுள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளில் களமிறங்கி இருக்கின்றன. இச்சூழலில் இந்த அற்புத ‘காய்’ குறித்த அரிய தகவல்களை அறிவோம்...

இது ஒரு பழமையான மூலிகைப்பயிர். முற்காலத்து யூதர்களின் உணவு. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.  

நேபாளத்தில் கடவுளுக்கு நிவேதனம் செய்யும் பொருளே வெங்காயம்தான். ‘மருத்துவ தந்தை’ ஹிப்போகிரேட்ஸ் ‘வெங்காய மருத்துவ’த்தை சொல்ல மறக்கவில்லை. 

அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் மருத்துவப்பொருளாகவே வெங்காயம் மதிக்கப்படுகிறது. தலைவலித்தால் வெங்காயத்தை தட்டிப்போடுகிற நம் பாட்டி வைத்தியமும் இதையே பறைசாற்றி நிற்கிறது. 

அசைவம், சைவமென அத்தனை வழி சமையலிலும், தாளிப்பு துவங்கி பஜ்ஜி, பக்கோடா என அத்தனையிலும் வெங்காயம் இருக்கிறது. தென்னிந்தியர்களின் பிரதான உணவாகி, தென்மாவட்ட மக்கள் வாழ்வுடன் இரண்டறக்கலந்த இது வாழ்வின் முக்கிய அங்கமாக நடை தொடர்கிறது.

வெங்காய காரத்திற்கு ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ வேதிப்பொருளே காரணம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழ வைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. 

மரத்தில் தொங்கும் ‘தேன் ராட்டு’ எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம். வகுப்புக்கு விடுமுறை பெற ‘கொஞ்ச நேர காய்ச்சலுக்காக’ பெரிய வெங்காயத்தை இரண்டாய் வெட்டி கைகளின் ‘அக்குள்’களில் சிறிது நேரம் வைக்கும் நகர விடுதி மாணவர்களும் இருக்கின்றனர். இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. 

சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது. 

தவறுக்கு தண்டனையாக கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயத்தை முகரச் செய்தலும் உண்டு. 

வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதயத்திற்கு சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது. பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம். 

‘மண்ணுக்குள் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி’ என்ற நம்மூர் வழக்குச் சொற்களில் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு வெங்காயத்தையே உவமைப்படுத்தியபோதும், ஈவெரா பெரியார் போன்றோர் ‘வெங்காயம்’ என்று அடிக்கடி தங்கள் அற்புத வார்த்தைகளில் பயன்படுத்தியதன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.   

வெங்காய வைத்தியம் குறித்து நம் சித்தர்கள் அருளிச்சென்றவை அதிகம். தோல் உரித்த வெங்காயத்துடன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட, பித்தம், ஏப்பம் குறையும். 

வெங்காயச்சாறு, கடுகு எண்ணெய் சமஅளவு எடுத்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் காதில் விட இரைச்சல் மறையும். வெங்காய துண்டுகளுடன், சிறிது இலவம் பிசின், கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் கலந்து சாப்பிட மூலக்கோளாறு நீங்கும் என வெங்காய மருத்துவத்தின் பட்டியல் நீள்கிறது. இப்படி பல அரிய விஷயங்கள் இருக்கும்போது, வெங்காயத்தின் விலை கூடியதில் ஆச்சரியம் என்ன என்கிறீர்களா...?

‘வாட்ஸப்பில்’ வெங்காயம்

வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு வாட்ஸப்பில் ஒரு கதை வலம் வருகிறது. ஒரு ஊரில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் கத்தரிக்காய் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறது. ‘தங்கள் நெருங்கிய நண்பர்’ இறந்து விட்டதே என்ற சோகத்தில் வெங்காயம், தக்காளி வாய் விட்டு கதறுகின்றன. இந்த சோகத்தில் அலைந்தபோது வாகனம் மோதி தக்காளி நசுங்கி பலியாகிறது. ‘இன்னொரு நண்பரும் மறைந்ததே’ என வெங்காயம் கதறியதாம். 

சிறிது நேரத்திற்கு பிறகு வெங்காயத்திற்கு ஒரு யோசனை. ‘கத்தரி இறந்தது தக்காளியும், நாமும் அழுதோம். தக்காளி இறந்ததற்கு நான் அழுதேன். நான் இறந்தால் யார் அழுவார்’ என எண்ணியவாறே கடவுள் படத்துக்கு முன்பே ஒரே அழுகாச்சியாம். உடனே கடவுள் வெங்காயத்தின் முன் தோன்றி, ‘வெங்காயமே கவலைப்படாதே... இன்று முதல் யார் உன்னை கொல்ல நினைக்கிறார்களோ, அவர்கள் உனக்காக கண்ணீர் விடுவார்கள்’ என்று கூறி மறைந்தாராம். வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வரும் காரணம் இப்போதாவது புரிகிறதா...?